Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துரத்தி கடிக்கும் தெருநாய்கள்

ஊட்டி, ஆக. 20: ஊட்டி நகாட்சிக்குட்பட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் பெரியார் காலனி பகுதியில் பெருகி வரும் தெரு நாய்களால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இவைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டி நகரில் அனைத்து பகுதிகளிலும் இவைகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வருவதுடன், இரவு நேரங்களில் நடந்துச் செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்திலும், அதன் அருகேயுள்ள பெரியார் காலனி பகுதிகளிலும் தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பகுதிக்கு இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டுவதுடன், சில சமயங்கில் கடித்து விடுகிறது. இதனால், இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரு நாய்களை பிடித்து வேறு பகுதிகளுக்கு கொண்டுச் சென்று விடவும், இவைகளை இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.