பந்தலூர், ஆக.20: பந்தலூர் பத்தாம் நம்பர் பழங்குடியினர் காலனி மக்களுக்கு வனத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உலக பழங்குடியினர் தினத்தையொட்டி தமிழ்நாடு காவல்துறை தேவாலா உட்கோட்டம் காவல்துறை சார்பில் டிஎஸ்பி கல்யானகுமார் தலைமையில் பழங்குடியினர் மக்களுக்கு பெட்ஷீட், கம்பளி மற்றும் திண்பண்டங்கள் ஆகியவை நேற்று வழங்கப்பட்டது. நிகழ்வில் எஸ்ஐகள் கருப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு சிகாபுதீன் மற்றும் பழங்குடியினர் மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
+
Advertisement



