Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்கூட்டர்-லாரி மோதி இளம்பெண் படுகாயம்

கூடலூர்,டிச.18: பந்தலூர் தாலுகா எருமாடு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு ராஜ். இவரது மனைவி திர்ஷியா (27). இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் எருமாட்டில் இருந்து கூடலூர் நோக்கி சென்றுள்ளார். கூடலூரை அடுத்த செம்பாலா பகுதியில் வந்தபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதில் லாரி, ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த திர்ஷியாவின் இடது கை மற்றும் காலில் சக்கரம் ஏறி காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.