Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கடைகளுக்கு குட்கா விற்க முயன்ற 2 பேர் கைது

கோத்தகிரி,ஜூன்8: கோத்தகிரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபமாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.பி பிருந்தா உத்தரவின்பேரில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் செந்தில்பிரபு மேற்பார்வையில், எஸ்.ஐ பிரசாத் தலைமையிலான போலீசார் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொணடனர். அப்போது கன்னிகாதேவி காலனியை சேர்ந்த பெருமாள் (33) மற்றும் விசாகு (33) ஆகியோர் மைசூரில் இருந்து சுமார் 6.9 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை கொண்டு வந்து கோத்தகிரி நகரில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றனர். தொடர்ந்து அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து பெருமாள் மற்றும் விசாகுவை கைது செய்தனர்.