Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வண்ண மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை பலகை இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து

ஊட்டி, செப். 28: நீலகிரி கோட்டத்தில் காட்டு மாடுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வனங்கள் முதுமலை புலிகள் காப்பகம், முக்கூருத்தி தேசிய பூங்கா, நீலகிரி வன கோட்டம், கூடலூர் வன கோட்டம் என பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடுகள், யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை உள்ளன. இதுதவிர ஈட்டி, தக்கு உள்ளிட்ட மரங்களும் உள்ளன. தற்போது வன விலங்குகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாத நிலையில் வன விலங்குகள் கிராம பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது.

வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, நீரோடைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நீலகிரி வன ேகாட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், குந்தா, பெங்கால்மட்டம், கேத்தி, செலவிப்நகர், ஊட்டி-கோத்தகிரி சாலை, குன்னூர்-கோத்தகிரி சாலை, தூதூர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் குட்டிகளுடன் சர்வ சாதாரணமாக மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதை நாள்தோறும் காண முடியும். வயதான, கண் பார்வை மங்கிய காட்டுமாடுகள் சாலையிலேயே உலா வருகின்றன.

நீலகிரி வன கோட்டத்தில் காட்டுமாடுகள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி அருகேயுள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்களை காட்டுமாடுகள் முட்டி சேதப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. காட்டுமாடுகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டுமாடுகள் அதிகமுள்ள பகுதிகளில் பொதுமக்கள், நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்யும் வகையில் எவ்விதமான எச்சரிக்கை பலகைகளும் இல்லை. எனவே காட்டுமாடுகள் நடமாட்டம் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

‘‘காட்டுமாடுகள் நடமாட்டம் தற்போது பகல் நேரங்களிலேயே அதிகரித்துள்ளது. வனத்துறை சார்பில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும்’’ என்றனர்.