Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் அரசு ஐடிஐக்களில் 31ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை

ஊட்டி, ஆக. 21: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டிற்கான நேரடி சேரக்கை வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூர் அரசு ஐடிஐயில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்துதல் தொழில்நுட்பம், மோட்டார் வண்டி மெக்கானிக், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், மேம்பட்ட சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப வல்லுநர், மின்சார வாகன மெக்கானிக் ஆகிய ஈராண்டு தொழிற் பிரிவுகளில் சேரலாம்.

தொழில்நுறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநர் ஓராண்டு படிப்பிற்கும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வயர்மேன் ஈராண்டு படிப்பு, வெல்டர் ஓராண்டு தொழிற்பிரிவில் அனைத்து பிரிவினரை சார்ந்த மாணவ, மாணவிகள் சேரலாம். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினருக்காக இயங்கும் கூடலூர் உப்பட்டி அரசு ஐடிஐயில் பிட்டர், மோட்டார் மெக்கானிக், மேம்பாட்ட சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப வல்லுநர், எலக்ட்ரிக் வாகன மெக்கானிக், ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநர், வயர்மென், வெல்டர், பிளம்பர் ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு ஊட்டி ஐடிஐ 94990 55707, 86100 73625, 90807 96827, கூடலூர் அரசு ஐடிஐ 0426-2263449, 8248763733 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.