ஊட்டி அருகே மற்றொரு மாட்டுடன் சண்டையிட்டு இறந்த காட்டு மாடு ஊட்டி நகராட்சி சார்பில் படகு இல்ல சாலையில் தூய்மைப்பணி
ஊட்டி, ஆக. 21: நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த உறுதிமொழி மற்றும் தூய்மை பணிகள் நேற்று நடந்தது. அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுத்துறை வங்கிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், பொது இடங்கள் உட்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிலும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து அலுவலக வளாகங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தரம் பிரித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஊட்டி நகராட்சி சார்பில் மத்திய பேருந்த நிலையம் முதல் படகு இல்லம் வரை சுமார் 1 கிமீ தூரம் தூய்மைப் பணிகள் நடந்தது. சாலை மற்றும் நடைபாதையில் இருந்த குப்பைகள், செடி கொடிகள், கால்வாய்களில் குவிந்திருந்த குப்பைகள் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டன.



