Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஊட்டியில் இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை

ஊட்டி, ஆக. 13: நீலகிரியில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், குளங்கள், கிணறுகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி காணப்படும். தென்மேற்கு பருவமழை ஓராண்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், எல் நினோ பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இம்முறை தென் மேற்கு பருவமழை பொய்த்து சராசரியை விட மிகவும் குறைவாகவாய மழை பெய்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், குளங்கள், குட்டைகளில் தண்ணீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உறுவாகியுள்ளது.

மழை பெய்ய வேண்டி நாள் தோறும் விவசாயிகள் தங்களது பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ஊட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று ஊட்டியில் உள்ள இஸ்லாமியர்கள் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஊட்டி பெரிய பள்ளி வாசலில் தலைமை காஜி முஜிபுர் ரகுமான் தலைமையில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.

தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு தொழுகையில் தமுமுக., தலைவர் அபுதாகீர் தலைமையில் பலரும் கலந்து கொண்டனர். மேலும், ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளி வாசல்களை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதே ேபான்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு தொழுகை மற்றும் பூஜைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.