Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பந்தலூரில் கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பந்தலூர், ஆக.12: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பந்தலூர் பகுதியில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இருந்தும் அவ்வப்போது மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பந்தலூரில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எறிய விட்டவாறு வாகனங்களை இயக்கினர். பல்வேறு பணிகளுக்காக பஜார் பகுதிக்கு வந்த பொதுமக்கள் கனமழை பெய்ததால் அவதியடைந்தனர்.