கோத்தகிரி,அக்.31: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது பாண்டியன் நகர். இந்த பகுதியில் நேற்று அதிகாலையில் உணவு தேடி வந்த 2 கரடிகள் தொழிலாளியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து உணவு பொருட்களை தின்றன. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் சத்தம் போட்டு கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் இந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


