Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குப்பைக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

கோத்தகிரி, மே 28: கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கொணவக்கரை ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட தப்பக்கம்பை பகுதியில் குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தப்பக்கம்மை அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஊராட்சி மன்றத்தின் மூலம் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்படும் வாகனம் மூலம் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.

இதனால் அந்த பகுதியில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இது நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே முறையாக கொணவக்கரை ஊராட்சி மன்றம் மூலம் நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை முறையாக அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.