Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரியமலையில் குரங்குகள் தொல்லை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

மஞ்சூர், ஜன.28: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கரியமலை. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட பலவகையானன மலைகாய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர் செடிகளை பிடுங்கி பெரும் நாசம் செய்து வருவதுடன் இப்பகுதிகளில் திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து கரியமலையில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து தொலைதூரமுள்ள வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.