பாலக்காடு, செப். 22: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடா அருகே கலால்த்துறை இன்ஸ்பெக்டர் சுனில் தலைமையில் காவலர்கள் வாகனப்பரிசோதனையில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த வாலிபரை அதிகாரிகள் தடுத்து விசாரணை செய்தனர்.
காவலர்களின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்க சந்தேகமடைந்த காவலர்கள் அவரது மொபட்டை சோதனை நடத்தினர். மொபட்டு டிக்கியில் 6 லிட்டர் வெளிநாட்டு மதுப்பாட்டில்கள் பதுக்கி மறைத்து வைத்திருந்ததைக் கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விஷ்ணு (28). என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஷ்ணுவை கைது செய்தனர்.


