கூடலூர், செப். 22: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பல வயல் பகுதியில் உள்ளது விகாஸ் காலனி. இங்குள்ள தனியார் தோட்டம் ஒன்றில் நேற்று சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் மானந்தவாடி வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தையின் முன்னங்கால் சுருக்கு கம்பியில் சிக்கி மீள முடியாமல் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சிறுத்தையை அங்கிருந்து எடுத்துச்சென்ற வனத்துறையினர், தோட்டத்தில் சுருக்கு கம்பி வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


