டேன்டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கல்
பந்தலூர்,அக்.18:நீலகிரி மாவட்டம் குன்னூர்,கோத்தகிரி,கூடலூர்,பந்தலூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டக் கழகம் டேன்டீ நிறுவி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 8.33 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் நீலகிரி எம்பி ராசா முயற்சியால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்த ஆண்டு டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.