பாலக்காடு, செப். 18: திருச்சூரில் கோயிலில் குத்துவிளக்கு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், திருச்சூர் அடுத்துள்ளது அந்திக்காடு. இங்குள்ள வடக்கேக்கராவில் மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இதில் குத்துவிளக்கு திருட்டுபோனது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் அந்திக்காடு போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் பெருங்கோட்டுக்கராவில் உள்ள நஷீர் என்பவரது பழைய இரும்புக்கடைக்கு நேற்று 2 பேர் குத்துவிளக்கு விற்க வந்தனர்.
குத்து விளக்கு ஏது? என்று கடைக்காரர் கேட்டார். அவர்கள் முன்னுப்பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த நஷீர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் கோயிலில் திருடிய குத்துவிளக்கு என்று உறுதியானது. இதனையடுத்து அசாமை சேர்ந்த அப்துல்மஜீத் (36), அப்துல்ஜலிக் (33) ஆகியோரை கைது செய்தனர்.


