பாலக்காடு, செப். 18: கேரள மாநிலம், திருச்சூர் வடக்காஞ்சேரி குன்னம்குளம் சாலையில் காரை ஒரு வாலிபர் தாறுமாறாக ஓட்டிச்சென்றார். அவரை எருமப்பட்டி போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். காரில் 41 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பதுக்கியது தெரியவந்தது.
விசாரணையில், காரில் வந்தவர் குன்னம்குளம் அருகே சுண்டல் பகுதியைச் சேர்ந்த சஜில் (24), என்பதும், போதைப்பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி கேரளாவில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


