Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெற்றோரை மிரட்ட விளையாட்டாக தூக்குப்போட்ட மாணவர் கயிறு இறுக்கி சாவு

பாலக்காடு, செப். 18: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ளது வேங்கரா. இங்குள்ள கண்ணமங்கலத்தைச் சேர்ந்த அஷரப் -ரம்லா தம்பதி மகன் முகமது அப்நாஸ் (11). இவர் எடக்காப்பரம்பு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முகமது அப்நாஸ் பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் பெற்றோரை மிரட்டி முகமது அப்நாஸ் தூக்குப்போடுவது போல் நடித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மாணவரின் கழுத்தை கயிறு இறுக்கியது. இதில், மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.