ஊட்டி, அக். 17: கூடலூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வரும் 22ம் தேதி நடக்கிறது. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் அதிகாரிகள் ேநரடி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் வரும் 22ம் தேதி காலை 9 மணி முதல் கூடலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.
இதில், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள் வருவாய் கிராமங்கள் வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வு மேற்கொள்ளும் போது மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை கள ஆய்வில் ஈடுபடும் உயர்நிலை அலுவலர்களிடம் நேரில் அளித்தோ அல்லது அன்றைய தினம் குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரிடம் நேரிலோ அளித்து பயன்பெறலாம்.


