Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோத்தகிரி அருகே புதர்மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை

கோத்தகிரி,அக்.17: கோத்தகிரி அருகேயுள்ள பேட்லாடா பகுதியில் உள்ள பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை புதர்மண்டி கிடக்கிறது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கோத்தகிரி அருகே உள்ள பேட்லாடா பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது கிராமத்திற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில், சமீப காலமாக அந்த பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வனவிலங்குகள் அடிக்கடி தஞ்சம் புகுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.  புதர் மண்டி கிடப்பதால் பேருந்து நிறுத்த நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.