Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மலப்புரம் அருகே மிக்சரில் இருந்த கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாப சாவு

திருவனந்தபுரம், ஜூலை 16: மலப்புரம் அருகே மிக்சரில் இருந்த கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீர். இவரது மகன் முகம்மது ரிஸ்வான் (3). கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த சிறுவனுக்கு தாய் சஜிதா மிக்சர் கொடுத்தார். அதை சாப்பிட்டபோது திடீரென ரிஸ்வானுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அந்த சிறுவனை குன்னும்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது மிக்சரில் இருந்த கடலை தொண்டையில் சிக்கியிருந்தது தெரியவந்தது. ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.