Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடக்கோடு கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

ஊட்டி, ஜூலை 16: ஊட்டி அருகேயுள்ள கடக்கோடு கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊட்டி மண் ஆய்வுக்கூட தோட்டக்கலை உதவி இயக்குநர் அனிதா தலைமை வகித்து, பேரூட்ட சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து போன்ற சத்துக்கள் பயிர் வளர்ச்சிக்கு எவ்வளவு இன்றியமையாதது?.

இரண்டாம் நிலை சத்துக்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படும் மகசூல் இழப்புகள் குறித்து விளக்கினார். மண் பரிசோதனை செய்து பரிந்துரைக்கப்படும் உரங்களை பயன்படுத்தினால் மகசூல் இழப்புகளை தவிர்த்து லாபகரமான விவசாயம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். தோட்டக்கலை அலுவலர் சந்திரன் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.

மண் பரிசோதனைக்கு மண் மாதிரி எடுப்பது எப்படி? என்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து ஆய்விற்காக மண் மாதிரிகள் பெறப்பட்டது. வேளாண்மை அலுவலர் நிர்மலா தேவி, உதவி வேளாண்மை அலுவலர் ேஜாதிகுமார் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஊர் தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.