Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவி மாயம்

ஈரோடு, மே 16: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரியின் 20 வயது மகள் கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி கவுந்தப்பாடியில் உள்ள அத்தை வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது செல்போன் சுவிட்ச் செய்யப்பட்டிருந்ததால், அக்கம்பக்கம் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து கவுந்தப்பாடி போலீசில் அளித்த புகாரின்பேரில், மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.