Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

140 கிலோ குட்கா பறிமுதல்

கோவை, ஜூலை 15: கோவையில் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அடிக்கடி சோதனை நடத்தி பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதேபோல், நேற்று முன்தினம் கணபதி கேகே நகரில் உள்ள பெட்டிக்கடை அருகே அதிகளவில் குட்காவை விற்பனைக்காக பதுக்கி மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில், அங்கிருந்த 140 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை விற்பனைக்காக பதுக்கிய கணபதி பாரதி நகரை சேர்ந்த கதிரவன் (39), கொண்டயம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (46) மற்றும் விஜயன் (48) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள் மற்றும் ரூ.4,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.