ஊட்டி,அக்.14 :சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தேசிய பேரிடர் மீட்டு துறை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது. ஆண்டு தோறும் அக்டோபர் 13ம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. நேற்று சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு ஊட்டி யுனிக் பள்ளி மைதானத்தில பேரிடர் தினம் தேசிய பேரிடர் மீட்பு குழு (என்டிஆர்எப்.,) சார்பில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, சதீஷ்வர் நாயக் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் காய்த்ரி முன்னிலை வகித்தார். தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஆய்வாளர் கலையரசன் தலைமையில், தீ ஏற்படும் சமயங்களில் தப்பிப்பது, கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், மழைக் காலங்களில் நிலச்சரிவுகள், மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கபப்பட்டவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கும் அளிக்கப்பட்டது. சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள் மற்றும் பல்வேறு பேரிடர் இன்னல்களின் போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், யுனிக் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.


