கோவை, அக். 14: தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க 73வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில், 2026-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, சங்க தலைவராக நீலகிரி மாவட்டம் கிரைக்மோர் பிளான்டேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் சந்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை டாடா காபி லிமிடெட் நிறுவன முதுநிலை பொது மேலாளர் பி.பி.அக்சையா துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக சி.ஸ்ரீதரன், முரளிபாலன் படிக்கல், எம்.ஜி.திம்மையா, அனில் ஜார்ஜ் ஜோசப், அனில் மேத்யூ, நல்லம்ரெட்டி வினய்குமார், ஆர்.ராஜ்குமார், பிரலாவ் பன்சாலி, பி.வி.சுரேஷ், பிலிப் சி.ஜேக்கப், பி.எல்.முருகப்பன், பி.ஸ்ரீனிவாசன் தேவய்யா, எஸ்.மோதிலால் கட்டாரியா, ஜோ அந்தோணி, பிரசாந்த் பன்சாலி, வினோதன் கந்தையா, பி.அப்பலத்தரசு, ஜே.கார்த்திக் நாராயண், ஆர்.வித்யாசங்கர் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.


