ஊட்டி,அக்.14: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் ஆறு வட்டங்களிடையே நடந்தது.
இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
நேற்று ஓட்ட பந்தயம்,தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


