கூடலூர்,செப்.11: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள தனியார் தோட்ட எல்லை பகுதியில் கடமான் ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த கடமானை ஆய்வு செய்தனர்.
இறந்த கடமானுக்கு சுமார் மூன்று வயது என்றும் உடற் கூராய்வுக்கு பின்னரே கடமான் இருந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


