Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுமாட்டின் கன்றுக்குட்டி மீட்பு

கோத்தகிரி,செப்.11: கோத்தகிரி நகர் பகுதியில் குட்டிகளுடன் காட்டு மாடு கூட்டம் உலா வந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த 2 வயதான காட்டுமாட்டு கன்றுக்குட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனால் காட்டு மாடுகள் கிணற்றை சுற்றி நின்று குட்டியை காப்பாற்ற போராடின. அப்போது அந்த பகுதி மக்கள் கிணற்றில் விழுந்த குட்டியை காப்பாற்றுவதற்காக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு மாடு கூட்டத்தை விரட்டியடித்து சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்றுகுட்டியை உயிருடன் மீட்டனர்.பின் மீட்கப்பட்ட கூட்டி அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடியது.