Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருச்சூர் அருகே பெண் சுகாதார ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

திருவனந்தபுரம், அக்.8: திருச்சூர் அருகே பெண் சுகாதார ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  எர்ணாகுளம் அருகே உள்ள இரும்பனம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் மகள் சாந்த்ரா (29). இவர் திருச்சூர் அருகே உள்ள புன்னயூர் பஞ்சாயத்து குடும்ப சுகாதார நிலையத்தில் இளநிலை சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள விடுதியில் சாந்த்ரா தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சுகாதார நிலைய ஊழியர்கள் சென்று பார்த்த போது சாந்த்ரா தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து புன்னயூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்த்ராவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.