Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பந்தலூர் காலனியில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம்

பந்தலூர், செப்.9: பந்தலூர் காலனி சாலை பகுதியில் கழிவுநீர் தேங்கி காணப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர் காலனி சாலை தாலுகா அலுவலகம் அருகே முதல் மின்வாரியம் அலுவலகம் வரையுள்ள பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கால்வாயில் தற்போது கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்படாததால் தேங்கி நிற்கின்றது. அதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.