Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஊட்டியில், 11ம் தேதி முன்னாள் படைவீரர் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

ஊட்டி, செப். 9: ஊட்டியில் வரும் 11ம் தேதி முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 11ம் தேதி ஊட்டியில் காலை 10 மணிக்கு நடக்கிறது.

பிங்கர்போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர் தம் விதவையர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் 2 நகல்களுடன் மாவட்ட கலெக்டரை சந்தித்து குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.