Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை மாவட்டத்தில் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு

கோவை மாவட்டத்தில் 85 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு போட வாய்ப்பு வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் 20,586 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மேட்டுப்பாளையம் தொகுதியில் 2061 வாக்காளர்கள், சூலூரில் 2027 வாக்காளர்கள், கவுண்டம்பாளையத்தில் 2818 வாக்காளர்கள், கோவை வடக்கில் 2679 வாக்காளர்கள், தொண்டாமுத்தூரில் 2187 வாக்காளர்கள், கோவை தெற்கில் 1702 வாக்காளர்கள், சிங்காநல்லூரில் 2233 வாக்காளர்கள், கிணத்துக்கடவில் 2135 வாக்காளர்கள், பொள்ளாச்சியில் 1716 வாக்காளர்கள், வால்பாறையில் 1028 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேல் இருக்கிறார்கள்.

இவர்கள் தபால் ஓட்டு போட வாய்ப்பு தரப்படும். இதேபோல் மாவட்ட அளவில் 45 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 15,654 பேர் உள்ளனர். இவர்களும் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  வரும் 12ம் தேதி முதல் இவர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு வழங்கி ஓட்டு பதிவு செய்யப்படும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.