Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னிமலை அருகே வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு

சென்னிமலை அருகே அரசியல் கட்சியினர் தொந்தரவு செய்ய வேண்டாம் என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பசுவபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கமேடு.‌ இந்த பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சிலர் ஊருக்குள் பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

அதில், வெங்கமேடு ஊர் பொதுமக்களான எங்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தருகிறோம் என்று மறுபடியும் பொய் சொல்லி ஏமாற்றி வாக்கு கேட்டு எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் இனியும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாற்றம் அடைய நாங்கள் தயார் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரால் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.