Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாகன விபத்தில் மாணவர் பலி

பாலக்காடு, அக்.8: திருச்சூர் கோடணூர் அடுத்த பள்ளிப்புரத்தை சேர்ந்த பிஜூவின் மகன் அவிநாஷ் (18), எடக்களத்தூர் அருகே வடுக்காட்டை சேர்ந்த ஷிபின் (16). இவர்கள் இருவரும் கொரட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு, பைக்கில் கொரட்டி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பைக் நிலைத்தடுமாறி தரிக்கெட்டு ஓடி நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இரு மாணவர்களும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் போலீசார் இரு மாணவர்களையும் மீட்டு கரிக்குற்றியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவிநாஷ் (18) என்ற மாணவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவர் ஷிபின் (16) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கொரட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.