பாலக்காடு, அக்.8: திருச்சூர் மாவட்டம் ஆலுவா சாலையில் ஒல்லூர் அருகே வாடகை வீடு ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெடுபுழா போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, அங்கு ஒல்லூரை சேரந்த மிபின் (27), தொடுப்புழாவை சேர்ந்த சாரி (48), பானுபிரியா (31), பவானி (32), கொல்லத்தை சேர்ந்த ஷைனி (38), மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களான அர்லிஷே (21), ராபியன் (28), கொல்கத்தாவை சேர்ந்த சுந்தரி (30) ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
தலப்பிள்ளியை சேர்ந்த லிஸி என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. லிஸி போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார். வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசார் உறுதி செய்ததை தொடர்ந்து வடமாநில பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 18 ஆயிரம் ரூபாய் மற்றும் 9 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நெடுபுழா போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபசாரம் நடத்தி வரும் லிஸியை போலீசார் தேடி வருகின்றனர்.


