Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குன்னூர் நகராட்சி 30 வார்டுகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள்

குன்னூர், பிப். 5: நகர பகுதியில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கும் தலா 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம் இந்த உபகரணங்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டன.

ஏற்கனவே முதற்கட்டமாக கிராமப்புற பகுதிகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நகர்ப்புற இளைஞர்களின் நலன் கருதி நகராட்சி பகுதிகளுக்கு இவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுசீலா, துணை தலைவர் வாசிம் ராஜா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி, நகராட்சி ஆணையாளர் (பொ) கணேசன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் இந்திரா உட்பட நகராட்சி வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.