Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மஞ்சூர், பிப்.4: கீழ்குந்தா பேரூர் கழக திமுக சார்பில் அறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் தெற்கு (மேற்கு) ஒன்றியம் கீழ்குந்தா பேரூர் கழக திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம் மஞ்சூர் கலைஞர் திடலில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழ்குந்தா பேரூர் கழக செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

தெற்கு (மேற்கு) ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சண்முகன், அவை தலைவர் மாடக்கன்னு, கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, கவுன்சிலர் நாகம்மாள், துணை செயலாளர்கள் சிவக்குமார், சத்தியநாராயணன் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.