கோபி, ஆக.29: கோபி அருகே கட்டிடில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள பெருந்தலையூர் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னான் மனைவி தங்கம்மாள் (90). இவர், கடந்த 11ம் தேதி தூங்கிய போது கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கம்மாள் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.



