ஊட்டி,ஆக.29: அரசு ேபாக்குவரத்து கழக ஊட்டி மண்டல நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஊட்டியில் ஏஐடியுசி., சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மாநகர போக்குவரத்து கழகத்தில் உத்திரபிரதேச மாநில தனியார் நிறுவனத்தின் மூலம் வட மாநில ஓட்டுநர், நடத்துநர்கள் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். 30 ஆயிரம் காலி பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பேருந்து சேவை குறைப்பை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
15வது ஊதிய ஒப்பந்த அரியர்ஸ் ஒப்பந்த படி உடனே வழங்க வேண்டும். வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட தொகையை அரசே ஏற்று அதை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். சீனியாரிட்டி டூட்டி முறையை முறையாக அமல்படுத்த வேண்டும். இதில் பாரபட்சம் காட்ட கூடாது. ஊட்டி - கோவை வழித்தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முறையான பணி வழங்க வேண்டும். ஊட்டி மண்டல நிர்வாகத்தின் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோத போக்கை கைவிட வேண்டும்.
தனியார்மயம், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். ேவலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி குறைந்த சம்பளத்தில் பணியமர்த்துவதை கைவிட வேண்டும். சிறு குற்றத்திற்கு பணி இடை நீக்கம், பணி இடமாறுதல் வழங்கி பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி., தொழிற்சங்கம் சார்பில் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். பொது செயலாளர் சையத் இப்ராஹிம், கவுரவ தலைவர் குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி துணை பொது செயலாளர் நசீர், துணை தலைவர் செபாஸ்டியன் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.




