Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எலி காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார்

பாலக்காடு, ஜூன் 29: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அரிபூர் அருகே வெளுத்தூரை சேர்ந்தவர் வைசாக் (36). பெயிண்டிங் தொழிலாளி. இவருக்கு கடந்த 22ம் தேதி காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அரிபூரில் உள்ள குடும்ப ஆரோக்கிய மையத்தில் பரிசோதனை செய்தார். அங்கு அவருக்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சல் தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எலி காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. எலி காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானதை தொடர்ந்து அரிபூர் சுற்றுவட்டார பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.