Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொட்டும் மழையில் மாணவர்கள் சேற்றில் கால்பந்து விளையாடி அசத்தல்

பந்தலூர், ஜூலை 28: பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி நிர்வாகம் ஆண்டுதோறும் மாணவ-மாணவிகளுக்கு சேற்றில் கால்பந்து விளையாடும் போட்டி நடத்தி வெற்றிப்பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள வயல் வெளியில் சேற்றில் கால்பந்து விளையாடும் போட்டியை கல்லூரி நிர்வாக இயக்குனர் ராசித்கஷாலி துவக்கி வைத்தார்.

உடல்கல்வி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் செரில்வர்கீஸ் தலைமையில் துறை வாரியான கல்லூரி மாணவ -மாணவிகளின் அணிகள் கொட்டும் மழையிலும் ஆர்வமுடன் கலந்துகொண்டு சேற்றில் கால்பந்து விளையாடி அசத்தினர். வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சேற்றில் கால்பந்து விளையாடும் நிகழ்வை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்