Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குன்னூர், ஜூலை 27: கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குன்னூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகக் கோயில்களில் பக்தர்களிடம் தரிசனக் கட்டணம் வசூலிக்கும் முறையைக் கண்டித்து குன்னூர் வி.பி. திடலில் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோவை கோட்டச் செயலாளர் குணாஜி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பக்தர்களிடம் தரிசனக் கட்டணத்தை வசூலிக்க கூடாது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும், பொருளாதாரத் தீண்டாமையை உருவாக்கும் கட்டண முறையைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.