Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தொட்டபெட்டா பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை

ஊட்டி, ஜூலை 27: ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊட்டி எம்எல்ஏ போஜராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எம்எல்ஏ போஜராஜன் பேசும்போது, ‘‘ஊட்டி-தொட்டபெட்டா சாலையில் வார விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கின்ற வகையில் தொட்டபெட்டாவில் இருந்து உட் ஹவுஸ் வழியாக மாற்றுப்பாதை ஏற்படுத்தப்படும். இதற்கான பணிகள் வனத்துறை மூலம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரிலுள்ள குறுகலான சாலைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி வன உயிரின மண்டலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் எல் நினோ தாக்கத்தினால் பாதிக்கப்படும் 12 மாவட்டங்களில் முதல் இடத்தில் நீலகிரி உள்ளது. இதை கருத்தில் கொண்டு நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, குளம் குட்டைகளை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி தேயிலையை மீண்டும் பாதுகாப்பு துறை கொள்முதல் செய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.