Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை, நீலகிரி தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

கோவை,செப்.26: கோவை,நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.  டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் சரவணன், வினோத்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் காய்ச்சலை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, டிரம்கள், வாளிகள், தட்டுகள், டயர்கள், டின்கள் மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். தண்ணீர் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். மேற்கூரை வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சம்புகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

வளாகத்தை சுற்றி முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.வாரந்தோறும் கொசு உற்பத்தி இடங்களை ஆய்வு செய்வதுடன், குறிப்பாக கட்டுமான பகுதிகள், வாகன நிறுத்தமிடங்கள் மற்றும் தோட்டங்களில் கவனம் செலுத்தி, தண்ணிர் தேங்கியிருந்தால் உடனடியாக அகற்றப்பட வேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய காலி டப்பாக்கள், டயர்கள், பாட்டில்கள் அகற்றப்பட வேண்டும். தண்ணீர் வடியவைக்க முடியாத நிலையில்,அதில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தை பயன்படுத்த வேண்டும்.