ஊட்டி, செப். 26: ஊட்டியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், குளிர் சற்று அதிகரித்துள்ளது. நீலகிரியில் பருவமழை பொய்த்தபோதிலும், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழையும், சில சமயங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, ஊட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக ஊட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில், வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் ஊட்டி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் மேகமூட்டம் காணப்பட்டது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது நீலகிரியில் மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
+
Advertisement


