Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்; கிண்ணக்கொரை, அப்பர்பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிளுக்கு அனுமதி வழங்கப்படுமா?

மஞ்சூர்,ஆக.26: கிண்ணக்கொரை,அப்பர்பவானி பகுதிகளில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து சுமார் 30கி.மீ தூரம் உள்ளது அப்பர்பவானி. இப்பகுதியில் இயற்கைகாடுகள், பச்சை பசேல் புல்வெளிகள், மடிப்புமலைகள், அருவிகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. மேலும் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமானதும், மாவட்டத்தில் பெரியதுமான மேல் பவானி அணையும் இப்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வரை எந்த தடையும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அப்பர்பவானிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா பயணிகள் அப்பர்பவானி பகுதிக்கு செல்ல வனத்துைற சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இதற்காக அப்பர்பவானி ெசல்லும் சாைலயில் 10கி.மீ முன்பாக ேகாரகுந்தா பகுதியில் ெசக்ேபாஸ்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியதில் இருந்து கேரளா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அப்பர்பவானியை பார்வையிட முடியாமல் பாதியிலேயே ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதேபோல் கிண்ணக்கொரை பகுதிக்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு நின்று போயுள்ளது.

பயணிகள் வருகை இல்லாததால் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வியாபாரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிண்ணக்கொரை மற்றும் அப்பர்பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதிகளில் சூழல் சுற்றுலாவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என சுற்றுலா ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.