Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி அருகே பிக்கோல் பகுதியில் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற சிறுத்தை

ஊட்டி, ஜூன் 25: ஊட்டி அருகே பிக்கோல் கிராமத்தில் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்ைத, கரடி, காட்டு மாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வரும் போது மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகிறது. தற்போது ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தை வலம் வருவது வழக்கம்.

இது போன்று வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை ஆகியவைகளை வேட்டையாடுகின்றன. சில சமயங்களில் கொட்டகைகளில் கட்டி வைத்துள்ள ஆடுகளையும் கொன்று விடுகின்றன. ஊட்டி அருகே உள்ள பிக்கோல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காரில் செல்லும் போது ஒரு சிறுத்தை ரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட அவர் அச்சத்தில் காரை நிறுத்தினார். தொடர்ந்து, அந்த சிறுத்தை காரின் முன் கம்பீரமாக நடந்து சென்றது. இதனை அவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அதன் பின்பு சிறுத்தை தேயிலைத்தோட்டத்திற்குள் சென்றதும் காரில் சென்றவர் நிம்மதி அடைந்தார்.

இந்த வீடியோ தற்ேபாது சமூக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது. எனவே, இப்பகுதியில் இரவு நேரங்களில் சாலை மற்றும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.