Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

இ கேஓய்சி.,யை வங்கி கணக்குடன் இணைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

ஊட்டி,செப்.25:நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, பிரதம மந்திரியின் கௌரவ உதவித் தொகை திட்டத்தில் மத்திய அரசால் விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் உதவித்தொகை என ஆண்டுக்கு மூன்று தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பலர் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் உள்ளது. மேலும், இ கேஓய்சி., செய்யப்படாமலும் உள்ளனர்.

ஆதார் எண் இணைப்பு மற்றும் இ கேஓய்சி., நிலுவையிலும், மேலும் பல எப்ஆர்., பதிவுகள் செய்யப்படாமலும் நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.

ஊட்டியில், 2405 விவசாயிகளும், குன்னூர் வட்டாரத்தில் 351 விவசாயிகளும், கோத்தகிரி வட்டாரத்தில் 773 விவசாயிகளும், கூடலூர் வட்டாரத்தில் 238 விவசாயிகளும் இந்த இ கேஓய்சி., மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தெரியவருகிறது. பதிவுகளை புதுப்பிக்காத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் தவணை தொகை கிடைப்பதில் விதிமுறைகளின்படி இடர்பாடுகள் இருப்பதால், பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் தாமாகவே முன்வந்து தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.