Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் வலம் வரும் காட்டுமாடு

ஊட்டி,செப்.25: மஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் வலம் வரும் காட்டு மாடால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பண விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டு மாடுகள், கரடி உட்பட அனைத்து விலங்குகளை எண்ணிக்கையும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள், மக்கள் வாழும் பகுதிக்கு உணவு தேடி வரும் பொழுது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இவைகள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் தற்போது மக்கள் வாழும் பகுதிக்குள் உணவு தேடி வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்.